ஒவ்வொரு படத்திற்காகவும் தன்னைத்தானே உருமாற்றிக் கொள்வதில் சீயான் விக்ரமுக்கு ஈடு இணையே இல்லை என்று சொல்லாம். உடலை ஏற்றி, இறக்குவது, தலைமுடி வளர்ப்பது, தாடி வளர்ப்பது, வயதான தோற்றத்தில் நடிப்பது என புதிதாக ஏதோ ஒன்று செய்துகொண்டே இருப்பார்.
'கடாரம் கொண்டான்' படத்திற்காக அதிரடியாக உருமாறும் விக்ரம்- அசத்தல் வீடியோ!
கடாரம் கொண்டான் படத்திற்காக நடிகர் சீயான் விக்ரம் தனது தோற்றத்தை அதிரடியாக மாற்றியுள்ளார்.
கடாரம் கொண்டான் விக்ரம்
தற்போது ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் 'கடாரம் கொண்டான்' படத்தில் நடித்துவரும் விக்ரம், அந்தப் படத்திற்காக மேக்கப் போடும் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. சுமார் 24 நொடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் விக்ரமுக்கு புதிய ஹேர் ஸ்டைல் வைக்கின்றனர்.
இதில் வழக்கம்போல் ஸ்டைலிஷ்ஷான தாடியுடன் விக்ரம் கலக்குகிறார்.
Last Updated : Mar 17, 2019, 9:58 AM IST