’என் காதலி உன் மனைவி ஆகலாம், ஆனால் உன் மனைவி என் காதலி ஆக முடியாது’ இதை மையக்கருவாக வைத்து படம் உருவாகிறது. ஸ்ரீ சக்திவேல் சினி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகும் இப்படத்திற்கு ‘காகித பூக்கள்’ என பெயரிட்டுள்ளனர். புதுமுகங்கள் லோகன் - பிரியதர்ஷினியுடன் ப்ரவீன்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் இதில், தில்லைமணி, தவசி , பாலு, ரேகாசுரேஷ் இன்னும் பலர் நடிக்கின்றனர். இத்தோஷ் நந்தா இசையமைக்க, சிவபாஸ்கர் கேமராவை கையாள, சுதர்சன் படத்தொகுப்பையும், பாலசுப்ரமணியம் கலையையும், ஸ்ரீ சிவசங்கர் - ஸ்ரீ செல்வி இருவரும் நடன பயிற்சியையும், சுப்ரமணியன் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனிக்கின்றனர்.
காகித பூக்கள் - ஒட்டன்சத்திரம் பகுதியில் படமாகும் முக்கோண காதல் கதை - undefined
திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் பகுதிகளில் முற்றிலும் மாறுபட்ட, முழுவதும் வேறுபட்ட முக்கோண காதல் கதையுடன் ‘காகித பூக்கள்’ என்னும் தலைப்பில் புதுமுகங்களுடன்புதிய இயக்குநருடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
காகித பூக்கள் - ஒட்டன்சத்திரம் பகுதியில் படமாகும் முக்கோண காதல் கதை
இதன் படப்பிடிப்பு ஒட்டன்சத்திரம், தேவச்சின்னாம்பட்டி, நவாமரத்துப்பட்டி, நால்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி தயாரித்து இயக்குநராக அறிமுகமாகிறார் முத்துமாணிக்கம். இந்த படபிடிப்பை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்க்கின்றனர்.