தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அருள்நிதி நடிக்கும் K13 படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு - K13 டீசர்

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் வெற்றிக்கு பிறகு அருள்நிதி நடித்து வரும் K13 படத்தின் டீசர் நாளை வெளியாகிறது.

அருள்நிதி

By

Published : Mar 17, 2019, 7:31 PM IST

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் பரத் மணிகண்டன் இயக்கும் பெயரிடப்படாத K13 என்ற படத்தில் அருள்நிதி நடித்து வருகிறார். சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்தே நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அருள்நிதி நடித்து வருகிறார். இப்படத்திற்கு டர்புகா சிவா இசையமைப்பதாக இருந்த நிலையில் அவருக்கு பதிலாக சாம் சிஎஸ் இசையமக்க ஒப்பந்தமானார்.

அருள்நிதி

K13 திரைப்படம் உளவியல் ரீதியாக திரில்லர் கதையாக உருவாகி வருகிறது. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பயங்கர வரவேற்பை பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் K13 படத்தின் டீசர் நாளை வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்

படத்தின் போஸ்டரில் எழுதி வைத்திருந்த பேப்பரை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தூக்கி எறிவது போன்றும் அதற்கு பின்னால் அருள்நிதி பார்ப்பது போல் படத்தின் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details