பிம்பி புரொடக்ஷன் சார்பில் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏகப்பட்ட படங்களைத் தயாரித்தவர் கே.சி.பொக்காடியா. இவர் படங்களை தயாரிப்பது மட்டுமின்றி படங்களை இயக்கியும் உள்ளார்.
இந்தியில் மட்டும் 38 படங்களை இயக்கியுள்ள இவர், சுமார் 25 ஆண்டுகளாக பல முன்னணி தென்னிந்திய இயக்குநர்களை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இந்தியில் சுமார் 59 படங்களைத் தயாரித்துள்ளார். அதில் 18 படங்களில் சல்மான் கான், ஷாருக்கான், அமீர் கான் ஆகியோர் நடித்துள்ளனர். 11 படங்களில் அமிதாப் பச்சனும், ரஜினிகாந்த், அக்ஷ்ய குமார் தலா ஐந்து படங்களிலும் நடித்துள்ளனர். இவர் ரஜினிகாந்தை வைத்து இந்தியில், Insaniyat Ke Devta, yagi ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.