தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஓடிடி தளத்தில் நேரடியாக வரவிருக்கும் ’பொன்மகள் வந்தாள்’ - Jyotika's Ponmagal Vandhal is all set to release directly on OTT platform

ஜோதிகா, பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ள 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் வரும் 29ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

பொன்மகள் வந்தாள்
பொன்மகள் வந்தாள்

By

Published : May 15, 2020, 7:57 PM IST

Updated : May 16, 2020, 12:45 AM IST

சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவன தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் ‘பொன்மகள் வந்தாள்’.

அறிமுக இயக்குநர் ஜெ.ஜெ. பெட்ரிக் எழுதி, இயக்கியுள்ள இந்தப் படத்தில், நடிகை ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார். இவருடன் பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகிய பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ’96’ திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

கரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் இந்த படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் தரப்பில் முன்னதாக முடிவெடுக்கப்பட்டதை அடுத்து, டிஜிட்டல் ரிலீசுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சரமாரியாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் இன்று அறிவித்துள்ளனர். வருகின்ற 29ஆம் தேதி ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளதை அடுத்து ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்புகளுடன் காத்துள்ளனர்.

இதையும் படிங்க:தனக்கு பிடித்த நடிகர்கள் இவர்கள்தான்! - திரிஷா

Last Updated : May 16, 2020, 12:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details