தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஜோக்கர் படத்திற்கு 'A' சான்றிதழ்; ஒரு கட்டும் கிடையாது! - 'Joker' gets 'A' certificate with no cuts

உலகமெங்கும் உள்ள சினிமா ரசிகர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்படும் ஜோக்கர் படத்திற்கு 'A' சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதோடு, எந்த ஒரு காட்சியும் கட் செய்யப்படவில்லை என்பதால் ஜோக்கர் கதாபாத்திரத்தின் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.

ஜோக்கர்

By

Published : Sep 26, 2019, 11:20 PM IST

டிசி காமிக்ஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற கதாபாத்திரம் ஜோக்கர். இந்த கதாபாத்திரத்திற்கு உலக அளவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. தற்போது இந்த கதாபாத்திரத்தின் முன்கதை படமாக்கப்பட்டுள்ளது.

அதில் ஆர்தர் ப்ளேக் என்ற புகழ்பெற்ற ஹாலிவுட் நாயகன் நடித்து, டோட் பிலிப்ஸ் இயக்கியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதையடுத்து இந்த படம் அடுத்த மாதம் 4ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஜோக்கர்

இந்நிலையில், இந்தியாவில் வெளியாகவுள்ள ஜோக்கர் படத்திற்கு இந்திய தணிக்கை வாரியம் A சான்றிதழ் வழங்கியுள்ளதோடு, எந்த ஒரு காட்சியையும் நீக்கவில்லை என அதிகார்ப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தி ஜோக்கர் கதாபாத்திர ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.

இதுவரை பாத்திராத ஒரு கோணத்தில் ஜோக்கர் கதாபாத்திரம் ரசிகர்களை ஈர்க்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: "ஆர்தர் ஃப்ளெக் ஜோக்கரான கதை" - மனம் திறந்த இயக்குநர் டோட் பிலிப்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details