நடிகர் ஜீவா நடிப்பில் கடந்தாண்டு கீ, கொரில்லா போன்ற படங்கள் வெளியானது. அப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறவில்லை. இதையடுத்து விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான றெக்க படத்தை இயக்கிய ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா, 'சீறு' படத்தில் நடித்துள்ளார்.
இபடத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுக நாயகி ரியா சுமன் நடித்துள்ளார். முதலில் இப்படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்த மாதம் 7ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அறிந்தும் அறியாமலும் படத்தில் நாயகனாக நடித்த நவ்தீப், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி பப்பி பட ஹீரோ வருணும் இதில் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார்.