மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் திரைப்படம் 'தலைவி'. இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இதில் எம்ஜிஆராக அரவிந்த்சாமியும், கருணாநிதியாக பிரகாஷ் ராஜும் நடிக்கின்றனர்.
கங்கனாவின் 'தலைவி' வெளியாகும் தேதி அறிவிப்பு! - தலைவி டீசர்
சென்னை: கங்கனா நடிப்பில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட தலைவி திரைப்படம் வெளியாகும் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
Thalaivi
இந்தத் திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்தப் படத்திற்காக கங்கனா 20 கிலோ உடல் எடையை அதிகரித்திருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகளை படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இப்படம் ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.