தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பாவடை தாவணியில் பெருமாளைத் தரிசித்த சின்ன மயில் 'ஜான்வி' - திருப்பதி ஏழுமலை கோயில்

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

Janhvi Kapoor
Janhvi Kapoor

By

Published : Feb 10, 2020, 4:34 PM IST

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள், ஜான்வி கபூர். கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியில் வெளியான 'தடக்' படம் மூலம் அறிமுகமானவர். இதையடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் நடித்த 'கோஸ்ட் ஸ்டோரீஸ்' படம் வெளியானது. உடல் மீது அதிக அக்கறை செலுத்தக்கூடிய ஜான்வி, ஜிம் பயற்சியும் மேற்கொண்டு வருகிறார்.

படப்பிடிப்பு, படப்பிடிப்பைவிட்டால் ஜிம் என எப்போதும் பிஸியாகவே ஜான்வி இருந்து வருகிறார். இதற்கிடையில் ஜான்வி கபூர் ஏழுமலையானைத் தரிசிப்பதற்கு ஆந்திர மாநிலம், திருமலை - திருப்பதி சென்றுள்ளார். இதனை அவர் தனது சமூக வலை தளமான இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸாக வெளியிட்டார்.

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த ஜான்வி கபூர்

திருப்பதியில் இவர் தென்னிந்தியப் பெண் போன்று, 'பாவடை, தாவணி' உடையணிந்து பக்தியுடன் சாமி தரிசனம் செய்துள்ளார். இயக்குநர் சரண் சர்மா இயக்கத்தில் 'குஞ்சன் சக்சேனா - தி கார்கில் கேர்ள்' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார், ஜான்வி. இப்படம் மார்ச் 13ஆம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இதையும் வாசிங்க: கபடி பயிற்சியாளராக நடிக்கும் தமன்னா!

ABOUT THE AUTHOR

...view details