லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’கோலமாவு கோகிலா’. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இப்படம் இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் இப்படத்தில் கதாநாயகியாக யார் நடிப்பார்கள் என்று தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். அதன்படி நயன்தாரா நடித்த இக்கதாபாத்திரத்தில் ஜான்வி காபூர் நடிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்தார்த் சென் குப்தா இயக்கும் இப்படத்தை, ஆனந்த் எல். ராய் தயாரிக்கிறார்.