தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஸ்ரீதேவியின் 2 மகள்களுக்கு கரோனா பாதிப்பு - ஜான்வி கபூருக்கு கரோனா

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்களான ஜான்வி கபூர், குஷி கபூருக்கு கடந்த வாரம் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Janhvi Kapoor
Janhvi Kapoor

By

Published : Jan 11, 2022, 3:52 PM IST

இந்தியாவில் கரோனா வைரசின் மூன்றாவது ஆலை வேகமாகப் பரவிவருகிறது. இம்முறை திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலருக்கும் தொற்று ஏற்பட்டுவருகிறது.

அந்தவகையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்களான ஜான்வி கபூர், குஷி கபூருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதை ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிசெய்துள்ளார்.

ஜான்வி கபூர் வெளியிட்ட பதிவு

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எனக்கும், என் சகோதரிக்கும் ஜனவரி 3ஆம் தேதி கோவிட்-19 தொற்று இருப்பது உறுதியானது. நாங்கள் எங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டோம்.

எங்களுக்கு தற்போது நெகட்டிவ் என்று சோதனை முடிவில் வந்துள்ளது. முதல் இரண்டு நாள்கள் கடினமாக இருந்தன, பின்னர் பரவாயில்லை. முகக் கவசம், தடுப்பூசி அணிந்தால் மட்டுமே நம்மைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். அனைவரும் பத்திரமாக இருங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கரோனாவிலிருந்து மீண்டார் சத்யராஜ்!

ABOUT THE AUTHOR

...view details