சீனாவில் பரவி உலகையே மிரட்டி வரும் கோவிட்-19 (கொரோனா) வைரஸ், தற்போது இந்தியாவில் தலைத்தூக்கத் தொடங்கியுள்ளது. உலகளவில் அச்சுறுத்தி வரும் இந்நோய் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
கொரோனாவின் கோரா பிடியில் 'நோ டைம் டு டை' - நோ டைம் டு டை
கொரோனா வைரஸ் காரணமாக அடுத்தமாதம் வெளியாக இருந்த 'நோ டைம் டு டை' படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உலகளவில் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் சீரிஸ் படங்களின் புதிய படமான நோ டைம் டு டை பிரமாண்டமாக தயாராகியுள்ளது. 25ஆவது ஜேம்ஸ் பாண்ட் படமான இதில் டேனியில் கிரேக், ஜேம்ஸ் பாண்டாக நடித்துள்ளார். கேசினோ ராயல், குவாண்டம் ஆஃப் சோலஸ், ஸ்கைஃபால், ஸ்பெக்ட்ரே படங்களுக்கு அடுத்து இவர் நடித்துள்ள கடைசி பாண்ட் படமாக 'நோ டைம் டு டை' படம் அமைந்துள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருந்தது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இப்படத்தின் வெளியீடு ஏப்ரலில் இருந்து நவம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து எம்ஜிஎம் யுனிவர்சல் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக மைக்கேல் ஜி வில்சனும் பாண்ட் படத்தின் தயாரிப்பாளரான பார்பரா ப்ரோக்கோலியும் கூறுகையில், உலகம் முழுவதும் இப்படத்திற்கு நற்பெயர் உள்ள நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நோ டைம் டு டை படத்தின் வெளியீடு நவம்பர் 2020 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன் படி யு.கேவில் இந்தாண்டு நவம்பர் மாதம் 12 தேதியும், யு.எஸ்ஸில் நவம்பர் 25 ஆம் தேதியும் வெளியாகும் என அறிவித்துள்ளனர். தற்போதைய இந்த அறிவிப்பால் ஜேம்ஸ்பாண்ட் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
TAGGED:
No Time To Die November 2020