'பகவதி' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் ஜெய். பிறகு ஏகப்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ள இவர், சிம்புவின் நெருங்கிய நண்பர் ஆவார்.
சிம்புவுக்கு திருமணம் எப்போது? - உண்மையை உடைத்த ஜெய் - jai movies
நடிகர் சிம்புவிற்கு திருமணம் முடிந்தவுடன்தான், தன்னுடைய திருமணம் என ஜெய் தெரிவித்துள்ளார்.
இவர் சமீபத்தில் செய்தியாளரைச் சந்தித்துப் பேசினர். அப்போது அவரிடம் திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஜெய், "சிம்புவுக்கு திருமணம் முடிந்தவுடன்தான் எனக்குத் திருமணம். அவருக்கு அடுத்த ஆண்டு திருமணம் நடந்துவிடும் என நினைக்கின்றேன்.
மேலும் 'பகவதி' படத்திற்குப் பிறகு விஜய்யுடன் இணைந்து நடிக்க வேண்டும் எனப் பல தடவை முயற்சி செய்தேன். ஆனால் அதற்கு அவர் நீதான் ஹீரோ ஆகிவிட்டாயே இனிமேல் எதற்காக எனக் கூறி வாய்ப்பு தரவேயில்லை" எனத் தெரிவித்துள்ளார்.