கரோனா வைரஸ் தொற்றுப் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்த நீண்ட விடுப்பை எப்படி பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட, தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜாகுவார் தங்கம் நமது ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறியிதாவது, “எனக்கு தற்போது 68 வயதாகிறது, நான் எப்போதும் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்துவேன். இப்போது நாம் வாழ்க்கையில் நினைத்துக் கூட பார்க்க முடியாத விடுமுறையில் உள்ளோம். இதை பயனுள்ள வகையில் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பொதுவாக நான் அதிகாலை 4 மணிக்கு எழுந்து கொள்வேன். யோகாசனம், தியானம் செய்வேன்.
அதற்குப் பிறகு எனக்கு பிடித்த புத்தகங்களை படிப்பேன். கராத்தே பயிற்சி செய்வேன். தொடர்ந்து வைரஸ்களை ஒழிக்கும் வகையில் மஞ்சள், வேப்பிலை கலந்த நீரில் நன்றாக குளிப்பேன். பிறகு காலை உணவை இஞ்சி, வெங்காயம் போன்ற மருத்துவ குணம் கொண்ட பொருள்களை பயன்படுத்தி செய்த சட்னியுடன் உட்கொள்வேன். வாரத்தில் ஒருநாள் நெல்லிக்காய், பப்பாளி இலையின் சாரை குடிப்பேன். அது நம் உடம்பிற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.