சென்னை: தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம் தனக்கு கொலை மிரட்டல் விடும் மூவரை கைது செய்யக்கோரி சென்னை காவல் ஆணையரிடம் இன்று (ஆக. 13) புகார் மனு ஒன்றை அளித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினராக உள்ளனர்.
இந்தச் சங்கத்தில் துரைசாமி, விஜயராகவா சக்கரவர்த்தி, சேகர் என்பவர்கள் கடந்த 2012ஆம் ஆண்டு உறுப்பினராக சேர்ந்தனர். அதன் பின்னர், துரைசாமி சங்கத்தின் செயலாளராக செயல்பட்டு வந்தார்.
விதிகளை மீறி...
இவர்கள் மூவரும் ஒன்று சேர்ந்து சங்க உறுப்பினர்களிடமும், பிற நபர்களிடமும் பல திரைப்படங்களை விற்பனை செய்து தருவதாகவும், திரைப்படத்தை பிறமொழிகளில் விற்பனை செய்து தருவதாகவும், திரைப்படத் தலைப்பை மற்ற தயாரிப்பாளரிடமிருந்து பெற்று தருவதாகவும் கூறி சங்கத்தின் விதிகளுக்கு முரணாக செயல்பட்டுவந்தனர்.
மோசடியால் நீக்கம்
மேலும், இந்த மூன்று பேரும் சேர்ந்து சங்க உறுப்பினர்களிடம் எனது பெயரைக் கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளனர்.