பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஏற்கனவே நான்கு சீசன்கள் கடந்துள்ள நிலையில், ஐந்தாவது சீசன் அடுத்த மாதம் 3 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
நிகழ்ச்சியின் புரொமோ மட்டும் வெளியான நிலையில், இதில் யார் யார் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்பது குறித்த பெயர் பட்டியல் வெளியாகாமல் உள்ளது. இருப்பினும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நபர்களின் பெயர்கள் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிறது.