நடிகை சமந்தா தற்போது, 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்துள்ளார். இதற்குப் பிறகு அவர் எந்த புதிய திரைப்படத்தின் கதைகளையும் கேட்காமல், ஒப்பந்தமான படங்களில் மட்டும் நடித்துவந்தார். குறிப்பாக ஃபேமிலி மேன் வெப் தொடருக்கு பிறகு அவர் எந்த படத்திலும் கவனம் செலுத்தாமல் இருந்தார்.
அவர் நாக சைதன்யாவுடன் குழந்தை பெற்றுக்கொள்ள தயாராகிவிட்டதால் தான் படங்களிலிருந்து சிறிது காலம் ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியானது.
அந்த சமயத்தில் சமந்தாவுக்கு பாலிவுட் வாய்ப்பு வந்ததாகக் கூறப்படுகிறது. ஷாருக்கானை வைத்து அட்லி இயக்கும் பாலிவுட் படத்தில் சமந்தா நடிப்பதாக இருந்ததாம். அப்போது அவர் அந்த வாய்ப்பை நிராகரிக்கவே, அந்த பட வாய்ப்பு நயன்தாராவிற்கு கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.