தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மஜா பண்ண ரெடி... அன்பான புள்ளைங்களுக்கு இர்பான் பதான் தமிழில் ட்வீட் - டிக்கிலோனா படத்தில் ஹர்பஜன் சிங்

கிரிக்கெட் போட்டியில் எதிரணி பேட்ஸ்மேன்களை அசத்தலான பந்துவீச்சால் திணறடித்த ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங், இர்பான் பதான் ஆகிய மூவரும் ஒரே நேரத்தில் கோலிவுட் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களை குஷிப்படுத்தவுள்ளனர்.

கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்

By

Published : Oct 15, 2019, 9:08 PM IST

Updated : Oct 16, 2019, 1:38 AM IST


சென்னை: விக்ரம் படத்தில் கமிட்டாகியுள்ள கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ரசிகர்களை ஆதரவு அளிக்கக்கோரி ட்வீட் செய்துள்ளார்.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார் அஜய் ஞானமுத்து.

இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படம் #சீயான்விக்ரம்58 என்று அழைக்கப்படுகிறது. படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

இதையடுத்து இந்தப் படத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் விதமாக கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஸ்டைலிஷான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, இர்பான் பதான் ரசிகர்களிடம் தமிழில் ஆதரவு கேட்டு ட்வீட் செய்துள்ளார்.

நீண்ட நாள்களாக கிரிக்கெட் விளையாட்டில் அதிகம் ஈடுபடாமல் இருந்துவரும் இர்பான் பதானுக்கு கோலிவுட் திரையுலகம் சிவப்பு கம்பளம் விரித்துள்ளது. இதனிடையே ஹர்பஜன் சிங் போல், தமிழில் ட்வீட் செய்துள்ள இர்பான் பதானுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை குவித்துவருகின்றனர்.

முன்னதாக, வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், ஹன்சிகா நடிக்கும் திகில் கலந்த நகைச்சுவைப் படத்தில் வில்லனாகவும், சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நடிகர் சந்தானம் நடிக்கும் 'டிக்கிலோனா' என்ற படத்திலும் நடிக்கின்றனர்.

Last Updated : Oct 16, 2019, 1:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details