தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி' - விருது பெற்ற ரஜினி உருக்கம்! - Rajini Award

கோவா: 50ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு 'கோல்டன் ஜூப்ளி ஐகான் விருது' வழங்கப்பட்டது. இந்த விருதை பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வழங்கினார்.

rajini

By

Published : Nov 21, 2019, 7:46 AM IST

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சா்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 50ஆவது சா்வதேச திரைப்பட விழா கோவாவில் நவ.20ல் தொடங்கி வரும் 28ஆம் தேதி வரை 9 நாட்கள் மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம், தகவல் ஒலிபரப்புத் துறைகளின் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ரஜினி, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் கோவா திரைப்பட விழாவைத் தொடங்கி வைத்தார்கள்.

கோவா சர்வதேச திரைப்பட விழா

சா்வதேசத் திரைப்பட விழாவுக்கு இந்த ஆண்டு பொன்விழா என்பதால் இந்திய சினிமாவுக்கு முக்கிய பங்களிப்பு செய்த திரைப்படக் கலைஞா்களை கெளரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 50ஆவது ஆண்டு சா்வதேச திரைப்பட விழாவின் கெளரவ விருதை நடிகா் ரஜினி காந்துக்கு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.

'ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி' என்ற விருது ரஜினிக்கு வழங்கப்பட்டது. ரஜினிக்கு இந்த விருதை பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வழங்கினார். விருது வழங்குவதற்கு முன்பு ரஜினி குறித்த குறும்படம் ஒன்று விழா அரங்கில் திரையிடப்பட்டது.

தமிழில் பேசி பெருமை சேர்த்த ரஜினி

இந்த விழாவில் பேசிய ரஜினி, '' இந்த விருதை வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி. தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், ரசிகர்களுக்கு இந்த விருதைச் சமர்ப்பிக்கிறேன். என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி'' என்று கடைசியாக தமிழில் பேசி, தனது உரையை முடித்துக்கொண்டார்.

’சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்

இந்த வருடம், 76 நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட படங்களும், இந்திய மொழிகளைச் சேர்ந்த 41 படங்களும் இந்தத் திரைப்பட விழாவில் திரையிடப்படுகின்றன. இதில், பார்த்திபன் இயக்கி, நடித்த 'ஒத்த செருப்பு', லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய 'ஹவுஸ் ஓனர்' ஆகிய 2 தமிழ்ப் படங்கள் திரையிடப்படுகின்றன.

இதையும் படிங்க: ரஜினியும், கமலும் இணைந்தால்...! அமைச்சர் நறுக் பதில்...!

ABOUT THE AUTHOR

...view details