தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'இன்று நேற்று நாளை-2' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்! - எஸ்.பி.கார்த்திக்

விஷ்ணு விஷால் நடிப்பில் நான்கு வருடங்களுக்கு முன்பு வந்த 'இன்று நேற்று நாளை' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று இன்று நாளை-2

By

Published : Jul 4, 2019, 4:55 PM IST

Updated : Jul 4, 2019, 8:56 PM IST

இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம் 'இன்று நேற்று நாளை'. 2015ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் மக்களை ரசிக்கும் விதமாகவும் நல்ல கதையம்சம் பொருந்திய டைம் மிஷினை மையப்படுத்தி வெளிவந்தது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் தமிழ் சினிமாவில் புதுமுயற்சி என்றும் மீண்டும் ஒரு முறை பார்க்க தூண்டிய படம் என்று வெகுவாக பாராட்டி வெற்றிப் பெறச்செய்தனர்.

அறிவியல் சார்ந்த படம் என்றாலும் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் புரியும்படியான வசனங்களால் எல்லோர் மனதையும் கவர்ந்தது. இப்படத்தின் வெற்றி நடிகர் விஷ்ணு விஷாலுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட் ஆனார். ஹிப் ஹாப் தமிழா இசையமைத்த இப்படத்திற்கு சிவி.குமார், ஞானவேல் ராஜா ஆகிய இருவரும் இணைந்து தயாரித்தனர். இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய ரவிக்குமார் கதை, திரைக்கதை, வசனம் எழுத அவரது உதவி இயக்குநர் எஸ்.பி. கார்த்திக் இயக்க இருக்கிறார்.

முதல் பாகத்தை தயாரித்த சி.வி.குமாரே இப்படத்தையும் தயாரிக்கிறார். மேலும், 'இன்று நேற்று நாளை -2' ஆம் பாகத்தில் சந்தீப் கிஷான் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், மீண்டும் விஷ்ணு விஷால், கருணாகரனும் இணைந்து நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். முதல் பாகத்தை போன்ற இதுவும் டைம் மிஷின் கதையாக உருவாக இருப்பதாகவும், இதில் முந்தைய காலத்தை கணிக்கும் டைம் மிஷின் பற்றிய கதையாக உருவாகும் எனக் கூறப்படுகிறது.

இப்படத்தின் நடிகைகள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Last Updated : Jul 4, 2019, 8:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details