சிகை படத்திற்கு கதை எழுதிய ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில், நடிகர் விக்ராந்த், நடிகை வசுந்த்ரா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'பக்ரீத்'. இந்தியாவிலேயே முதன்முறையாக ஒட்டகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்திருக்கிறார். கடந்தாண்டு ஆகஸ்டு மாதத்தில் தொடங்கிய இப்படத்தின் டீசர், கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
'பக்ரீத்' படத்தின் பாடல்கள் நாளை ரிலீஸ்! - நடிகர் விக்ராந்த்
நடிகர் விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'பக்ரீத்' படத்தின் இசை நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்த படத்தில் விலங்குகளை நேசிக்கும் நபராக விக்ராந்த் நடித்துள்ளார். ஒட்டகத்தை வாங்கும் விக்ராந்த், தமிழ்நாட்டு சூழ்நிலைக்குள் வாழ ஒட்டகம் சிரமப்படுவதை அறிந்து, அதனை ராஜஸ்தானிற்கு சென்று விட நினைக்கிறார். அப்போது வழியில் ஏற்படும் சம்பவங்களை வைத்து இப்படம் நகரும் என்று டீசரில் இடம்பெற்றிருந்த காட்சிகள் தெளிவப்படுத்தின.
இந்நிலையில், இப்படத்தின் பாடல்கள் நாளை (மே 17) வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து இசையமைப்பாளர் டி.இமானும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.