இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு 2017ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
இதனையடுத்து, இந்தியா திரும்பி வந்த விராட் கோலி - அனுஷ்கா தம்பதியினர், மும்பையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்தினர்.
விராட் கோலியின் மனைவி கர்ப்பமா? - ரசிகர்கள் கேள்வி - viral photo
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா கற்பமாக இருப்பதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடக்க இருப்பதால் உலகக்கோப்பையில் பங்கேற்க விராட் கோலி இங்கிலாந்து சென்றுள்ளார். இந்நிலையில், அனுஷ்கா சர்மா மருத்துவமனைக்குச் செல்லும் புகைப்படம் வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள், அனுஷ்கா மகிழ்ச்சியான செய்தியா சொல்லுங்க, கர்ப்பமா இருக்கீங்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு அனுஷ்கா தரப்பில், அனுஷ்கா சர்மா நீண்ட நாட்களாக முதுகுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், பிசியோதெரபி மருத்துவரை பார்க்க சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.