தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நடிகை மியா ஜார்ஜின் தந்தை காலமானார் - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

நடிகை மியா ஜார்ஜின் தந்தை ஜார்ஜ் ஜோசப் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.

miya george
miya george

By

Published : Sep 22, 2021, 9:32 AM IST

கேரளாவை சேர்ந்த மியா ஜார்ஜ் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை ஆவார். கடந்த ஒரு வாரமாக இவரது தந்தை ஜார்ஜ் ஜோசப் (75) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று (செப். 21) மருத்துவம் பலனின்றி ஜார்ஜ் ஜோசப் காலமானார். அவரது உடல் இன்று (செப். 22) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இவரது மறைவுக்குத் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும், மியா ஜார்ஜின் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

மியா ஜார்ஜ்

'அமரகாவியம்' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை மியா ஜார்ஜ் 'இன்று நேற்று நாளை', 'ஒருநாள் கூத்து', 'வெற்றிவேல்' என்று ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கும், கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் பிலிப்பையாவுக்கும் 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், ஒரு வயதில் பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:டேனியல் சேகர் வேட்டியில் கலக்குகிறீர்கள் : ராணாவைப் புகழ்ந்த பிரித்விராஜ்

ABOUT THE AUTHOR

...view details