பாலிவுட் முன்னணி நடிகர் சஞ்சய் தத்திற்கு, கடந்த ஆகஸ்ட் மாதம் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் தான் நடிக்கும் படங்களிலிருந்து ஓய்வு எடுத்துகொள்வதாக அறிவித்தார். இந்நிலையில், சஞ்சய் தத் தான் விரைவில் புற்றுநோயிலிருந்து மிண்டு வருவேன் என்று வீடியோ ஒன்றில் பேசியுள்ளார். அதில் தனது தலையில் உள்ள ஒரு வடுவை காண்பித்து, என் வாழ்க்கையில் கிடைத்த சமீபத்திய வடு இது. நான் இதை வெல்வேன்.
விரைவில் புற்று நோயிலிருந்து மீண்டு வருவேன். நான் நவம்பர் மாதம் முதல் ’கே.ஜி.எஃப் 2’ படத்தில் கலந்து கொள்கிறேன். அதற்காக தான் தாடி வளர்க்கிறேன்”என்று தெரிவித்துள்ளார்.