இசையமைப்பாளர் இளையராஜா நீண்ட ஆண்டுகளாக பிரசாத் ஸ்டூடியோவில் இசை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்னையை அடுத்து இளையராஜா அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு பிரசாத் ஸ்டூடியோவில் இருந்த இளையராஜாவின் உடைமைகள் ஒப்படைக்கப்பட்டன.
புதிய ஸ்டூடியோவில் இசை அமைக்கும் இளையராஜா! - ilayaraja new studio news in Tamil
புதிய ஸ்டூடியோவில் இசையமைப்பாளர் இளையராஜா இசை அமைக்கும் பணிகளை மேற்கொள்கிறார்.
புதிய ஸ்டூடியோவில் இசை அமைக்கும் இளையராஜா!
இந்நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள எம்எம் பிரிவியூ திரையரங்கை புதிய ஸ்டூடியோவாக இளையராஜா மாற்றியுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் பாடல் பதிவுகளை இந்த ஸ்டூடியோவில் இருந்துதான் இளையராஜா மேற்கொள்கிறார்.
இதையும் படிங்க...இந்தியில் ரீமேக்காகும் 'ஓ மை கடவுளே'