கரோனா தொற்று அச்சம்: கோவா சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைப்பு - கரோனா தொற்று அச்சம்
கரோனா தொற்று அச்சம் காரணமாக நவம்பர் மாதம் நடைபெற இருந்த சர்வதேச கோவா திரைப்பட விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கோவாவில் 51ஆவது சர்வதேச திரைப்பட விழா இந்த ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதிவரை நடைபெற இருந்தது. ஆனால் தற்போது கரோனா தொற்று அச்சம் காரணமாக இந்த விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
51ஆவது சர்வதேச திரைப்பட விழா 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 முதல் 24ஆம் தேதிவரை நடைபெறும் எனவும் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். இந்த திரைப்பட விழாவின்போது உலக சுகாதார அமைப்பினர் கூறும் வழிகாட்டுதல்கள், நெறிமுறைகள் பின்பற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.