'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இதன்பின் இவர் கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் நடித்தது குறித்து யாஷிகா ஆனந்தின் ரசிகர்கள் அவ்வப்போது சமூக வலைதளத்தில் கலாய்த்தும், அவருக்கு இரட்டை அர்த்த கருத்துகளை பதிவிட்டும் வருகின்றனர். இதனால் இத்தனை நாள் அமைதிகாத்து வந்த யாஷிகா தற்போது மெளனம் கலைத்துள்ளார்.
இதுகுறித்து அவர், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்ததற்காக வருந்துகிறேன். அதில் நடித்ததற்காக நான் இன்னமும் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன். என்னிடம் கதை சொன்ன போது குறிப்பிட்ட காட்சிகளை மட்டுமே சொன்னார்கள்.