தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சினிமா ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க காத்திருக்கும் CIFF

19ஆம் ஆண்டு பன்னாட்டுத் திரைப்படத் திருவிழாவில் 121 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளதாக CIFF அறிவித்துள்ளது.

சினிமா ரசிகர்களுக்கு
சினிமா ரசிகர்களுக்கு

By

Published : Dec 23, 2021, 2:03 PM IST

சென்னையில் 19ஆம் ஆண்டு பன்னாட்டுத் திரைப்படத் திருவிழா வரும் 30ஆம் தேதிமுதல் ஜனவரி 6ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதில் 53 நாடுகளைச் சேர்ந்த 121 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

தமிழ் உள்பட ஏழு இந்திய மொழிகள் மட்டுமின்றி ஈரானிய, கொரிய, ஜெர்மானிய திரைப்படங்களும் இத்திருவிழாவில் திரையிடப்படுகின்றன. ஏற்கனவே குறிப்பாக பன்னாட்டுத் திரைப்பட விழாக்களில் வெற்றிபெற்ற A hero, when pomegranets howl, yuni , a taxi உள்ளிட்ட பன்மொழிப் படங்கள் திரையிடப்பட உள்ளன.

விழாவின் தொடக்க விழா திரைப்படமாக, 'Three floors' என்னும் இத்தாலிய திரைப்படமும், இறுதி நாளில் Vortex என்னும் பிரெஞ்சு திரைப்படமும் திரையிடப்படுகிறது.

பன்னாட்டுத் திரைப்பட விழா

இந்நிலையில் தமிழ்த் திரைப்படப் பிரிவில், பூமிகா, கர்ணன், கட்டில், கயமை கடக்க, மாறா, ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும், சேத்துமான், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், தேன், உடன்பிறப்பே என மொத்தம் 11 படங்கள் திரையிடப்படுகின்றன.

இதில் சிறந்த படங்களாகத் தேர்வாகும் இரு படங்களுக்கும் பரிசு வழங்கப்படவுள்ளது. சென்னை சத்யம் திரையரங்கில் நான்கு திரைகள், SDC அண்ணா திரையரங்கில் ஒரு திரை என மொத்தம் ஐந்து திரைகளில் நாள்தோறும் நான்கு காட்சிகள் திரையிடப்படுகின்றன.

மேலும் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள விரும்புவோர் www.icaf.in / chennaiflimfest.com உள்ளிட்ட வலைதளங்களில் 1000 ரூபாயும், கல்லூரி மாணவர்கள் 500 ரூபாயும் பதிவுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என CIFF தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:அயோத்யா திரைப்பட விழா: நடிகர் ஆர்யாவுக்கு சிறந்த நடிகர் விருது

ABOUT THE AUTHOR

...view details