தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'ஹவுஸ் ஓனர்' படத்தை கைப்பற்றிய 'தளபதி 63' தயாரிப்பாளர்

லட்சுமி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்' படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளது.

File pic

By

Published : May 18, 2019, 8:48 AM IST

மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் சார்பில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவனப்படம் 'ஹவுஸ் ஓனர்'. இந்தப் படத்தில் 'பசங்க' படப்புகழ் கிஷோர், லவ்லி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இது குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறுகையில்,

'ஹவுஸ் ஓனர்' படம் மனித உறவுகளை பற்றி பேசுவதோடு, ஒரு அழகான காதல் கதையையும் கொண்டிருக்கிறது. எளிய மற்றும் எதார்த்தமான படமான இதை பார்வையாளர்கள் ரசிப்பார்கள் என நான் நம்புகிறேன்.

பெரிய பட்ஜெட்டில் படங்கள் தயாரிப்பது, பெரிய படங்களை ரிலீஸ் செய்வதற்கு பெயர் போன ஏஜிஎஸ், எங்களை போன்ற சிறிய பட்ஜெட்டில் உருவான படத்தை ரிலீஸ் செய்ய ஆர்வம் காட்டியிருப்பது உற்சாகத்தை அளிக்கிறது.

இது எங்கள் குழுவினருக்கு மட்டும் கிடைத்த வெற்றி என்று நான் கூற விரும்பவில்லை. நல்ல கதைகளை கொண்ட படங்களுக்கு பெரிய கதவுகளைத் திறந்து விட்பட்டிருக்கிறது என்று கூறினார்.

அட்லி இயக்கித்தில் தற்போது நடிகர் விஜய் நடித்து வரும் 'தளபதி 63' என்று அழைக்கப்படும் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details