நடிகர், இயக்குநர் என பன்முக திறமைகளைக் கொண்ட லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தற்போது `ஹவுஸ் ஓனர்' படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் பசங்க கிஷோர் நாயகனாகவும் நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் நாயகியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் ஆடுகளம் கிஷோர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
'ஹவுஸ் ஓனர்' படத்துக்கு யூ சான்றிதழ் வழங்கிய தணிக்கைக் குழு - லக்ஷ்மி ராமகிருஷ்ணன்
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் கிஷோர் - லவ்லின் சந்திரசேகர் நடிப்பில் உருவாகியிருக்கும் `ஹவுஸ் ஓனர்' படத்திற்கு தணிக்கைக் குழு யூ சான்றிதழ் வழங்கியுள்ளது.
File pic
இப்படத்தை மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் சார்பில் மருத்துவர் ராமகிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை ஏஜிஎஸ் சினிமாஸ் வாங்கியுள்ளது.
இந்நிலையில் இப்படத்திற்கு தணிக்கைக் குழுவினா் யூ சன்றிதழ் வழங்கியுள்ளனர். இப்படம் ஜூன் 21ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.