மீசைய முறுக்கு படத்திற்கு பிறகு ஹிப் ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடிக்கும் படம் நட்பே துணை. இப்படத்தில் அனாகா, இயக்குநர் கரு.பழனியப்பன், பழைய ஜோக் தங்கதுரை, எருமசாணி விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். நட்பையும், ஹாக்கியையும் மையப்படுத்தி உருவாகியுள்ள நட்பே துணை படத்தை டி.பார்த்திபன் தேசிங்கு இயக்கியுள்ளார்.
ஹிப் ஹாப் ஆதி இப்படத்தில் கதாநாயகனாக நடித்து இசையமைத்துள்ளார். மீசையை முறுக்கு படத்தை போன்றே இப்படத்தையும் இயக்குநர் சுந்தர்.சி தயாரித்துள்ளார். சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் ரசிகர் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. நட்பே துணை படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று போஸ்ட் புரொடெக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது.
நட்பே துணை ஏப்ரல் 12-ல் ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம் - KOLLYWOOD
ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள 'நட்பே துணை' படம் ஏப்ரல் 12 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ஹிப் ஹாப் ஆதி
இந்நிலையில், நட்பே துணை படத்திற்கு தணிக்கை குழு யு சான்று வழங்கியுள்ளது, மேலும், இப்படம் ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
எனவே, ஹிப் ஹாப் இசையின் மூலம் தனக்கென்று தனி அடையாளத்தை பதித்த ஆதி இந்த படத்தில் வெற்றி நாயகனாக கால் பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.