பிரபல பாப் பாடகரும், ஹாலிவுட் நடிகருமான நிக் ஜோனஸை மணந்து அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார், முன்னாள் உலக அழகியும் பிரபல இந்திய நடிகையுமான பிரியங்கா சோப்ரா.
கரோனா ஊரடங்கால் உலகமே சோர்ந்து இயங்கிவரும் இந்த நேரத்திலும், உலகம் முழுவதுமுள்ள தன் ரசிகர்களுக்கு தொடர்ந்து தன் இன்ஸ்டா பதிவுகளின் மூலம் பிரியங்கா உத்வேகம் அளித்து வருகிறார்.
அந்த வகையில், பொதுவாகவே ஃபிட்னெஸில் மிகுந்த கவனம் செலுத்தும் பிரியங்கா, தற்போது தன் வீட்டின் கௌச்சில் சாய்ந்தவாறு ’டம்பெல்ஸ்’ உடற்பயிற்சி கருவிக்கு பதிலாக குழந்தை ஒன்றைத் தூக்கி உடற்பயிற்சி செய்யும் காணொளியை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
”ஜிம் இல்லையென்றால் என்ன? எந்த பிரச்னையும் இல்லை” எனக் குறிப்பிட்டு பிரியங்கா பகிர்ந்திருக்கும் இந்தக் காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க:இரண்டு வில்லன்களுடன் மோதவிருக்கும் வொண்டர் வுமன்