கார்ட்டூன் தொடராக அலாவுதீன்
1990களில் புகழ் பெற்ற கார்டூன் தொடர்களில் ஒன்றாக 'அலாவுதீன்' என்ற அனிமேஷன் தொடர் இருந்தது. ஜான் முஸ்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தத் தொடர் அப்போது 504 மில்லியன்அமெரிக்கா டாலர் வசூலித்தது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினராலும் ரசித்து பார்க்கப்பட்ட இந்தத் தொடர் தற்போது அதே பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது.
ரியல் அலாவுதீன்
பேண்டஸி திரைப்படமாக தயாராகியிருக்கும் 'அலாவுதீன்' படத்தில் கனடா நடிகர் மெனா மஸூத் கதாநாயகனாகவும், நாமி ஸ்காட் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். படத்தில் முக்கிய கதாபாத்திரமாக அமைந்துள்ள ஜீனி என்ற பூதமாக, மென் இன் பிளாக், ஐ ரோபாட்ஸ் படப் புகழ், வில் ஸ்மித் நடித்துள்ளார். ரியல் கதாபாத்திரங்களுடன் உருவாகியிருக்கும் இப் படம் 3டி தொழில்நுட்பத்துடன்வரும் மே மாதம் 24-ம் தேதி வெளியாகிறது. இதனிடையே தற்போது படத்தின் முழு நீள டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படத்தை வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரித்துள்ளது.
ரீமேக்காகும் மற்ற அனிமேஷன் தொடர்கள்
டிஸ்னி நிறுவனத்தின் மற்ற புகழ் பெற்ற அனிமேஷன் தொடர்களான மூலன், தி லிட்டில் மெர்மெய்ட், ஸ்னோ ஒயிட் உள்ளிட்ட தொடர்களும் ரியல் கேரக்டர்களுடன் திரைப்படமாக ரீமேக் செய்யப்படவுள்ளன. முன்னதாக, சமீபத்தில் நடைபெற்று முடிந்த கிராமி விருது நிகழ்ச்சியில் வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரித்து வரும் புதிய படமான 'டம்போ' டிரெய்லர் வெளியிடப்பட்டது.