பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளரான ஹார்வி வெய்ன்ஸ்டீன் இதுவரை 200 படங்களைத் தயாரித்துள்ளார். இவர் தன்னிடம் வாய்ப்பு கேட்டுவரும் நடிகைகளைப் பட வாய்ப்புக்காகப் பாலியல் ரீதியாக அணுகியதாக, ஏஞ்சலினா ஜோலி புகார் அளித்தார்.
அவருடன் இணைந்து 80-க்கும் மேற்பட்ட மாடல் அழகிகளும், அவர் மீது பாலியல் புகார் அளித்தனர். அப்புகாரின் அடிப்படையில் ஹார்வி வெய்ன்ஸ்டீன் கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அண்மையில் அவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து, ரிக்கர்ஸ் தீவு சிறையில் அடைக்கப்பட்டார்.