தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விஜய் சேதுபதியுடன் போட்டி போடும் ஹர்பஜன் சிங் - சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி நடித்து வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் பஞ்சாபி ரீமேக்கில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய் சேதுபதியுடன் போட்டி போடும் ஹர்பஜன் சிங்
விஜய் சேதுபதியுடன் போட்டி போடும் ஹர்பஜன் சிங்

By

Published : Jun 17, 2021, 10:43 AM IST

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ”பிரண்ட்ஷிப்” என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இதில் லாஸ்லியா, அர்ஜுன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

இந்நிலையில் அடுத்ததாக விஜய்சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் பஞ்சாபி ரீமேக்கில், ஹர்பஜன் சிங் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் திரைப்படம் மிகக் குறைவான பொருள்செலவில் எடுக்கப்பட்டு, ரூ.18 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

தமிழில் மாபெரும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், ஒரியா, மராத்தி, மலையாளம், குஜராத்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

வெளியான தகவல்களின்படி, ஹீரோவாக நடித்த ஒரு படம் வெளியாவதற்கு முன்னரே, தமிழின் முன்னணி கதாநாயகன் விஜய்சேதுபதி திரைப்பட ரீமேக்கிலேயே நடிக்கும் ஹர்பஜன் சிங்கின் அசாத்தியம் பாராட்டத்தக்கதே. ஆனால், அவருக்கு இணையான நடிப்பை ரீமேக்கில் வெளிப்படுத்துவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் காண வேண்டும்.

இதையும் படிங்க : திகட்டாத தேனமுது த்வானி பானுசாலியின் புகைப்படத் தொகுப்பு

ABOUT THE AUTHOR

...view details