சென்னை :90 காலகட்டங்களில் தமிழ் சினிமாவை கலக்கிய முன்னணி நடிகைகளில் ஒருவர் லைலா. இவர் தமிழ் திரையுலகில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
அஜித் நடித்த 'தீனா', 'விக்ரம் நடித்த 'தில்' சூர்யாவுடன் 'பிதாமகன்' என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். தில், தீனா, மௌனம் பேசியதே ஆகிய திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன.
பிதாமகன் படத்தில் இவரது நடிப்பு மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. குறிப்பாக பிதாமகன் படத்தில் ரயிலில் இடம்பெற்ற காமெடி காட்சி அனைவரையும் கவர்ந்தது என்றே சொல்லலாம். இப்படம் குறித்து லைலா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.
அதில், ”ரயிலில் இடம்பெற்ற காமெடி காட்சி படப்பிடிப்பு தேனி அருகே உள்ள 2 ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட பத்து நாள்கள் இந்த படப்பிடிப்பில் நான் கலந்துகொண்டேன். இந்த பத்து நாள்களும் எனது மறக்க முடியாத நாள்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.