தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 4, 2019, 11:34 AM IST

ETV Bharat / sitara

'அது நானல்ல... வதந்திய நம்பாதீங்க!' - ஹன்சிகா

எனது புதிய படங்கள் குறித்த அறிவிப்பை நானே வெளியிடுவேன். அப்படி இல்லையென்றால் நான் ஒப்பந்தமாகும் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவிப்பார்கள் என்று கட் அண்ட் ரைட்டாக கூறியுள்ளார் நடிகை ஹன்சிகா.

நடிகை ஹன்சிகா

மஹா என்ற படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்துவருகிறார் நடிகை ஹன்சிகா. இது அவரது 50ஆவது படமாகும். மேலும், இரண்டு தமிழ்ப் படங்களில் அவர் நடித்துவருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அறிமுகமாகும் படத்தில் ஹன்சிகா நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. மேலும், அந்தப் படம் குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

இதையடுத்து இந்தச் செய்திக்கு மறுப்பு தெரிவித்து நடிகை ஹன்சிகா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

எனது புதிய படம் குறித்து செய்தி ஒன்றை பார்க்க நேர்ந்தது. அது முற்றிலும் வதந்தி. நான், அதில் கூறியிருப்பதுபோல் அந்தக் குறிப்பிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. எனது புதிய படங்கள் குறித்த அறிவிப்பை நானே வெளியிடுவேன்.

அப்படி இல்லையென்றால் நான் ஒப்பந்தமாகும் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவிப்பார்கள். இனி இதுபோன்றதொரு செய்தியை வெளியிடுவதற்கு முன் என்னை தொடர்புகொண்டு உறுதிபடுத்திக்கொள்ளமாறு பத்திரிகையாளர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details