தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சிவப்பு நிற ஆடையில் ரசிகர்களை கவர்ந்த கத்ரீனா கைஃப்! - கத்ரீனா கைஃப்

பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்ட 'ஹலோ ஹால் ஆஃப் ஃபேம் விருது' நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பாலிவுட், கத்ரீனா கைஃப்

By

Published : Mar 20, 2019, 8:15 PM IST

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஹலோ ஹால் ஆஃப் ஃபேம் விருது வழங்கப்படுவது வழக்கம். எனவே, ஹலோ ஹால் ஆஃப் ஃபேம் விருது-2019வழங்கும் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், கத்ரீனா கைஃப், தேவிமகள் ஜான்வி கபூர், சோனம் கபூர், விக்கி கெளஷால், பராகான் அக்தர், சிபானி தன்டேகர், ஆயுஷ்மான் குரானா நடிகை மாளவிகா ராஜ் மற்றும் பல முக்கிய பிரபலங்களும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வின்போது, பாலிவுட் நடிகர் நடிகைகள் கார்பெட் அணிவகுப்பு நடத்தினர். அப்போது, நடிகை கத்ரீனா கைஃப் உடுத்தி வந்த சிவப்பு நிற ஆடை பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து நடிகை மாளவிகா ராஜ் உடுத்தி வந்த அறைகுறை ஆடை பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும், சமீபத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான`கல்லி பாய்’திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்திற்கான சூப்பர் ஸ்டார் விருதை ரன்வீர் சிங் பெற்றார். இந்த ஆண்டில் பலராலும் அதிகம் கவரப்பட்ட பெண் நடிகைக்கான விருது கத்ரீனா கைஃப்பிற்கு வழங்கப்பட்டது. அதேபோன்று மிகவும் பிரபலமான ஆண் நடிகர் என்ற விருதை ஆயுஷ்மான் குரானா பெற்றார்.

இதனைத்தொடர்ந்து, தடக் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவிற்கு அறிமுகமான போனி கபூர் -தேவி தம்பதியின் மகள் ஜான்வி கபூர், சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினை பெற்றார். மேலும், மிகவும் தலைச்சிறந்த திறமை கொண்டவருக்கான விருது விக்கி கெளசால் வழங்கப்பட்டது. 2019- ஹலோ ஹால் ஆஃப் ஃபேம் விருது நிகழ்ச்சியின் நிறைவாக ஆஸ்மி, அக்தர் ஆகியோருக்கு இந்திய சினிமாவின் டைமலஸ் சின்னங்களை வழங்கி கவுரவித்தனர்.

பழம்பெரும் நடிகை சர்மிளா தாகூருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

ABOUT THE AUTHOR

...view details