'பூவரசம் பீப்பி', 'சில்லுக் கருப்பட்டி' படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் இயக்குநர் ஹலிதா ஷமீம். இப்படங்களை தொடர்ந்து இவர் ஏலே என்னும் படத்தை இயக்கினார். இப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி கிராமப்புறத்தில் குச்சி ஐஸ் விற்பனை செய்யும் 'முத்துக்குட்டி' என்னும் கலகலப்பான மனிதராக நடித்துள்ளார்.
சமுத்திரகனியுடன் நடிகர் மணிகண்டன், நடிகை மதுமதி உள்பட பலர் நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்த இப்படத்திற்கு கேபெர் வாசுகி, அருள்தேவ் ஆகியோர் இசையமைத்துள்ளனர். ஒய் நாட் ஸ்டூடியோஸ் - ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இதை இணைந்து வழங்குகிறது. வால் வாட்ச்சர் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி தயாரித்திருந்தனர்.