ஜோக்கர் படத்திற்கு பிறகு இயக்குநர் ராஜூமுருகனின் அடுத்த படைப்பு ’ஜிப்ஸி'. இப்படத்தில் ஜீவா, அறிமுக நடிகை நடாஷா நடித்துள்ளனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
'ஒரு குரல அடக்க நினைச்சா ஓராயிரம் குரல் வெடிக்கும்': ஜிப்ஸி ட்ரெய்லர்! - ஜீவா
ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள 'ஜிப்ஸி' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
gypsy
சமீபத்தில் படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 'ஜிப்ஸி' திரைப்படம் இசை, காதல், அரசியல் என அனைத்தையும் கலந்து அதிரடி வசனங்களோடு இயக்கியுள்ளார் ராஜூமுருகன்.
அதுமட்டுமல்லாது டீஸர் வெளியானதைத் தொடர்ந்து படத்தில் இடம்பெற்றுள்ள 'வெரி வெரி பேட்' எனும் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அனைவரது எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது.