தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மாணவியின் படிப்புச் செலவுக்காகப் பாடல் பாடிய ஜி.வி. பிரகாஷ் - latest cinema news

மாணவியின் படிப்புச் செலவுக்காக வெப் சீரிஸ் ஒன்றில் ஜி.வி. பிரகாஷ் குமார் டைட்டில் பாடல் பாடியுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ்

By

Published : Aug 3, 2021, 12:39 PM IST

திரைப்படங்களுக்கு இணையாக தற்போது வெப் சீரிஸ்களும் ரசிகர்களைக் கவர்ந்துவருகின்றன. அந்தவகையில் 'விகடன் டெலிவிஸ்டாஸ்', 'மோஷன் கன்டென்ட் குரூப்' இணைந்து வழங்கும் வெப் சீரிஸ் 'ஆதலினால் காதல் செய்வீர்'.

இந்நிலையில் இந்த வெப் சீரிஸின் டைட்டில் பாடலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பாடியுள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் வெப் சீரிஸ் ஒன்றில் டைட்டில் பாடலை பாடுவது ஜி.வி. பிரகாஷிற்கு இதுவே முதல்முறை ஆகும்.

'ஹே நண்பா நேத்து நாளை கவலை இல்ல' எனத் தொடங்கும் பாடலை நித்திஷ் எழுதியுள்ளார். இதில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் பாடலை பாடியதற்காக தனக்கு தரப்படும் ஊதியத்தை, முதுகலை மாணவி ஒருவரின் படிப்புச் செலவுக்கு அப்படியே தந்துவிடுவதாக ஜி.வி. பிரகாஷ் கூறியுள்ளார். இவரின் இந்தச் சேவைக்குப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:7 ஆண்டுகளுக்குப் பிறகு கன்னட திரைப்படத்தில் நடிக்கும் த்ரிஷா

ABOUT THE AUTHOR

...view details