தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'தேர்வில் தோற்றால் வாழ்க்கையில் தோற்றதாக அர்த்தமில்லை' - ஜீ.வி. பிரகாஷ் - நீட் தேர்வு

நீட் அச்சம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்து இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Prakash
Prakash

By

Published : Sep 13, 2020, 10:22 PM IST

நீட் அச்சம் காரணமாக நேற்று (செப்.12) ஒரே நாளில் தமிழ்நாட்டில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக நடிகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என்று பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜீ.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "நீட் தேர்வுக்கு நிறைய மாணவர்கள் கஷ்டப்பட்டு தயாராகி தைரியத்தோடு தேர்வு எழுதியிருப்பீர்கள். உங்கள் அனைவருக்கும் ஒன்று சொல்ல விரும்புகிறேன் வெற்றியோ தோல்வியோ, அதை சரிசமமாகப் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள்.

நாம் வாழ்க்கையில் பெரிய இடத்திற்குச் செல்ல தோல்வி மிகவும் முக்கியம். இந்த ஒரு தேர்வில் தோற்றால் வாழ்க்கையில் தோற்றதாக அர்த்தமில்லை. தற்கொலை எதற்குமே முடிவு கிடையாது" என்று பேசியுள்ளார். ஜீ.வி. பிரகாஷின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

ABOUT THE AUTHOR

...view details