ஐந்து முக்கிய இயக்குநர்கள் இயக்கத்தில், வித்தியாசமான திரைக்கதைகளுடன் வெளிவந்த 'புத்தம் புது காலை' திரைப்படம் ரசிகர்களிடையே சிறப்பான விமர்சனங்களைப் பெற்றது.
சுகாசினி மணிரத்னம், கௌதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகிய தமிழ்ப் படங்களின் முன்னணி இயக்குநர்கள் இணைந்து ஐந்து கிளைக் கதைகளை இயக்கியிருந்தனர்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் ட்விட்டர் பதிவு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைப்பில் வெளியான படத்தின் டைட்டில் பாடல் காணொலிக்காட்சி சிறப்பான வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் 'புத்தம் புது காலை' பாடல் ப்ரோ மேக்ஸ் விருதைத் தட்டிச் சென்றுள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : பிகினி உடையில் ஆண் நண்பருடன் விளையாடும் ஜான்வி