தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

எஸ்.பி.பிக்காக கூட்டுப் பிரார்த்தனை செய்வோம் : பாரதிராஜாவைத் தொடர்ந்து ஜிவி பிரகாஷ் வேண்டுகோள் - ஜிவி பிரகாஷ் வேண்டுகோள்

சென்னை : பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டி நடைபெறும் கூட்டு பிரார்த்தனையில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென ஜிவி பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜிவி பிரகாஷ்
ஜிவி பிரகாஷ்

By

Published : Aug 19, 2020, 4:01 PM IST

பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கரோனா தொற்று காரணமாக சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவர் மீண்டும் உடல் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று வேண்டி திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் தங்களது பிரார்த்தனைகளை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ், ”எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவாக குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்பதற்காக நடைபெறும் கூட்டுப் பிரார்த்தனையில் நாம் அனைவரும் கலந்துகொண்டு அவருக்காக பிரார்த்தனை செய்வோம்.

நாளை (ஆக. 20) மாலை ஆறு மணிக்கு அவரவர் இருக்கும் இடத்திலிருந்தே அனைவரும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details