தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் கின்னஸ் சாதனையாளர் படம்! - Vijeesh Mani Film screened at Goa International flim Festival

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் கின்னஸ் சாதனை படைத்த விஜேஷ் மணியின் சமஸ்கிருத மொழி திரைப்படமான 'நமோ' திரையிடப்படுகிறது.

Guinness World Record holder Vijeesh Mani Sanskrit language Film screened at Goa International flim Festival
Guinness World Record holder Vijeesh Mani Sanskrit language Film screened at Goa International flim Festival

By

Published : Jan 20, 2021, 11:45 AM IST

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இயக்குநரும், தயாரிப்பாளருமான விஜேஷ் மணி சமஸ்கிருத மொழியில் 'நமோ' என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் ஜெயராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் வெங்கட் சுபாவும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படம் ஜனவரி 22ஆம் தேதியன்று கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.

ஜெயராம் நடிப்பில் சமஸ்கிருத திரைப்படமான நமோ

இதுவரை ஐந்து திரைப்படங்களை இயக்கியிருக்கும் விஜேஷ் மணி தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு புதுமையை இடம்பெற வைத்துள்ளார். இதுவரை இவர், மலையாளத்தில் இரண்டு படங்கள், ஒரு சமஸ்கிருத மொழிப்படம், ஒரு இருளா மற்றும் குரும்பா மொழிப் படங்களை இயக்கியிருக்கிறார்.

விஸ்வகுரு திரைப்படம்

மலையாளத்தில் எடுக்கப்பட்ட விஜேஷ் மணியின் முதல் திரைப்படமான விஸ்வகுருவை மெடிமிக்ஸ் நிறுவன உரிமையாளர் அனூப் தயாரித்தார். இத்திரைப்படத்திற்கு விஜேஷ் மணி 51 மணி நேரத்தில் கதை எழுதி படப்பிடிப்பு நடத்தி சென்சார் செய்தார். இத்திரைப்படம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து 2017ல் 'புழயம்மா' என்ற மலையாளத் திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தை கோகுலம் கோபாலன் தயாரித்தார். இத்திரைப்படம் சிறந்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வுத் திரைப்படமாக அறியப்பட்டு ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றது. இப்படம் முழுவதுமே ஆற்றிலேயே நடப்பதுபோல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது இதன் தனிச்சிறப்பு.

நேதாஜி திரைப்படம்

மூன்றாவதாக 2018ஆம் ஆண்டு இருளா மொழியில் ஒரு திரைப்படத்தை இயக்கினார். 'நேதாஜி' எனப் பெயரிடப்பட்ட அத்திரைப்படத்தை ஜானி குருவில்லா தயாரித்தார். இந்தத் திரைப்படம் இந்தியன் பனோராமாவுக்குத் தேர்வானது. கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றது.

இதேபோல் 'குரும்பா' மொழியில் ஒரு திரைப்படத்தைத் இயக்கியிருக்கிறார். இதனை சோஹன் ராய் தயாரித்திருக்கிறார்.

ம்ம்ம் திரைப்படம்

'ம்ம்ம்' என்பதுதான் இத்திரைப்படத்தின் பெயர். இத்திரைப்படம் ஆஸ்கர் தேர்வுக்கான திரையிடலுக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சர்வதேச விருது வென்ற 'தேன்' திரைப்படம்!

ABOUT THE AUTHOR

...view details