தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ராமோஜி ஃபிலிம் சிட்டியில் மரக்கன்று நட்டு வைத்த சோனு சூட்! - சோனு சூட்

இயக்குநர் ஸ்ரீனு வைட்லா விடுத்த மரக்கன்று நடும் சவாலை ஏற்று நடிகர் சோனு சூட் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் மரக்கன்று நட்டு வைத்தார்.

சோனு சூட்
சோனு சூட்

By

Published : Sep 29, 2020, 5:33 PM IST

சமூக வலைதளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு சேலஞ்ச் ட்ரெண்டாவது வழக்கம். அந்தவகையில் சமீபகாலமாக மரம் நடும் சேலஞ்ச் ட்ரெண்டாகி வருகிறது. திரையுலகை சேர்ந்த பலரும் இந்த சவாலை ஏற்று மரக்கன்றுகள் நட்டு வைத்துவிட்டு, மூன்று திரையுலக பிரபலங்களுக்கு இந்த சவாலை விடுகின்றனர்.

இந்நிலையில், இயக்குநர் ஸ்ரீனு வைட்லா இந்த மரம் நடும் சவாலை, நடிகர் சோனு சூட்டிற்கு விடுத்தார். அச்சவாலை ஏற்று நடிகர் சோனு சூட் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் மரக்கன்று நட்டு வைத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிறது.

முன்னதாக மரக்கன்றுகள் நடும் சவாலை நடிகர்கள் விஜய், மகேஷ் பாபு, நாக சைதன்யா நடிகைகள் சமந்தா. கீர்த்தி சுரேஷ், ராஷி கண்ணா, கல்யாணி பிரியதர்ஷன், ஆஷிகா ரங்கநாதன் ஆகியோர் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மகேஷ்பாபுவின் சவாலை ஏற்றார் விஜய்!

ABOUT THE AUTHOR

...view details