சென்னை:சமூகவலைதளமான டிக்டாக்கில் காணொலி பதிவிட்டு பிரபலமடைந்தவர் ஜி.பி. முத்து. இந்தியாவில் டிக்டாக் தடைசெய்யப்பட்டதை தொடர்ந்து இவர், யூடியூபில் சேனல் தொடங்கி, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்.
இவரது பேச்சு வழக்கான 'செத்தப் பயலுவளா', 'நாரப் பயலுவளா' 'ஏம்ல இப்டி பண்ணுதீக', 'ரொம்ப சந்தோஷம் நண்பர்களே' நெட்டிசன்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்த வார்த்தைகள் மீம்ஸ்களாக பகிரப்படுவதை காணலாம்.
முன்னதாக, இயக்குநர் சசிகுமார் தயாரிப்பில் நடைபெற்றுவரும் திகில் காமெடி திரைப்படத்தில் ஜி.பி. முத்து நடிக்கவுள்ளதாகவும், அவருடன் நடிகர் சதீஷ், 'குக் வித் கோமாளி' தர்ஷா குப்தா, மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.