தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஜேம்ஸ் பாண்ட் பட நடிகை மரணம்

ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்த நடிகையான நாஜா ரெயன் வயது முதிர்வு காரணமாக காலமானார்.

நாஜா ரெயன்

By

Published : Apr 9, 2019, 2:02 PM IST

ஜேம்ஸ் பாண்ட் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள நடிகர்–நடிகைகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ஜேம்ஸ்பாண்ட் பட வரிசையில் மூன்றாவதாக வந்த படம் 'கோல்ட் பிங்கர்'. 1964ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. கய்ஹமில்டன் இயக்கினார். இதில் சீன் கானரி ஜேம்ஸ் பாண்டாக நடித்து இருந்தார்.

இப்படத்தில் ஜேம்ஸ் பாண்ட் காதலியாக நடித்தவர் டனியா மல்லெட். மற்றொரு நடிகையாக நடித்தவர் நாஜா ரெயன். இவர் இப்படம் மட்டுமின்றி மற்றொரு படமான 'ஃபரம் ரஷ்யா வித் லவ்' படத்திலும் நடித்திருந்தார்.

பின் சினிமாவில் அதிகம் நடிக்காமல் தொலைக்காட்சி தொடர்களில் கவனம் செலுத்திவந்தார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக நாஜா ரெயன் நேற்று (ஏப்.8) மரணம் அடைந்தார். இது குறித்து ஜேம்ஸ் பாண்ட் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு உள்ளது.

ஜேம்ஸ் பாண்ட் ட்விட்டர்

ABOUT THE AUTHOR

...view details