தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'ஒரு சான்ஸ் குடு' பாடல் உருவானது குறித்து கௌதம் மேனன்! - ஒரு சான்ஸ் குடு பாடல்

இயக்குநர் கௌதம் மேனன் 'ஒரு சான்ஸ் குடு' பாடல் உருவானது குறித்து மனம் திறந்துள்ளார்.

கௌதம் வாசுதேவ் மேனன்
கௌதம் வாசுதேவ் மேனன்

By

Published : Jun 7, 2020, 12:22 AM IST

நடிகர் சிம்பு, த்ரிஷா நடிப்பில் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான குறும்படம், 'கார்த்திக் டயல் செய்த எண்'. யூ டியூப்பில் வெளியான இக்குறும்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது.

இதனையடுத்து கௌதம் மேனன் தற்போது, 'ஒரு சான்ஸ் குடு' பாடலை இயக்கியுள்ளார். சாந்தனு, மேகா ஆகாஷ் மற்றும் கலையரசன் நடித்துள்ள இப்பாடலின் டீஸர் வெளியாகி, இணையத்தில் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை பெற்றிருக்கிறது.

இந்த பாடல் குறித்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கூறுகையில், "காதல், நட்பு மையமாக வைத்து இப்பாடல் உருவாகியுள்ளது. ஒருவன் தன் நண்பனை பற்றி நல்ல விசயங்களை ஒரு பெண்ணிடம் சொல்லப் போக, அவள் இவனை தவறாக புரிந்து கொள்கிறாள். அவன் அதை மிக நகைச்சுவையான வகையில் கையாள்கிறான். இதுவே பாடலின் மையம். இப்பாடலின் முதல் விதை பொது முடக்கத்திற்கு முன்பாகவே ஆரம்பித்து விட்டது.

இப்பாடல் முழுவதும் மொட்டை மாடியில் படமாக்கப்பட்டது. அந்த இடங்கள் பாடலுக்கு பெரும் அழகை கூட்டுவதாக அமைந்திருக்கிறது. இந்த முழுப்பாடலும் எனது வீட்டு மொட்டை மாடியிலேயே படமாக்கப்பட்டது. மொட்டை மாடி என்பது இந்த பொது முடக்க காலத்தில் அனைவரும் அதிக நேரம் செலவிடும் இடமாக மாறியிருக்கிறது.

அதனால் பார்வையாளர்கள் இதனை வெகு நெருக்கமாக உணர்வார்கள். நடிகர்கள் தவிர்த்து மொத்தமாகவே 7 பேர் மட்டுமே இதில் பணியாற்றியுள்ளனர்.

நடிகர்கள் அனைவரும் மேக்கப் இல்லாமல் நடித்துள்ளனர். அவர்களின் சொந்த உடையில் இருந்து படப்பிடிப்பிற்கு முந்தைய நாள் உடை வடிவமைப்பாளர் உத்ரா மேனன் தேர்ந்தடுத்த உடையுடனே நடித்தார்கள். டீஸருக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதே போல் முழுப்பாடலை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

பின்னணி பாடகர் கார்த்திக் இசையமைக்க, ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இப்பாடலுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்" என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: காந்தப் பார்வை... கவர்ச்சி குயினாக மாறிய ஆத்மிகா - டிரெண்டாகும் புகைப்படம்

ABOUT THE AUTHOR

...view details