திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கிருக்கும் படம் கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ். வடசென்னையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் ப்ரியங்கா ருத், அசோக், இயக்குநர் வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர். ரத்தமும், சதையும் கலந்த வன்மத்துடன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஒரு பெண்ணின் பின்னணியில் உருவகப்படுத்தியுள்ள காட்சிளும் வசனங்களும் பிரமாதம். டீசர் நடுவே வரும் வசனங்களில் அனல் தெறிக்கின்றன.
அசர வைக்கும் இசையுடன் ஆரம்பிக்கும், படத்தின் டீசரில், 'ஆசைக்கும் தேவைக்கும் நடுவுல ஒரு சின்ன கோடுதான்.. தேவை ஆசையாக மாறும்பொழுது நாம எடுத்துக்கனும்' என்ற தெரிக்கும் வசனங்கள் காட்சியை அருமையாக நகர்த்தி செல்கிறது. ஆனால், புத்தரின் சிலையை வைத்துக்கொண்டு அற்பத்தனமாக படுக்கையறை காட்சியை வைத்திருப்பது புத்தரையே கேவலப்படுத்துவது போன்று இருக்கிறது.